கோலாலம்பூர், பிப் 12 – பத்திரிகையாளர் Lalitha Gunatatnam த்திற்கு எதிராக அண்மையில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்ட போலீஸ் புகார் மேல் நடவடிக்கை எதுவுமில்லையென வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் Abdul Jalil Hassan இணையத்தள பதிவேட்டிடம் உறுதிப்படுத்தினார்.
புக்கிட் அமான் விசாரணை பிரிவு மேற்கொண்டுவரும் விசாரணையுடன் தொடர்பு இல்லை என்பதால் லலிதாவுக்கு எதிராக செந்தூல் போலீஸ் நிலையத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி புகார்தாரர் செய்திருக்கும் புகார் மேல் நடவடிக்கை இல்லையென வகைப்படுத்தப்பட்டுள்ளதாக Abdul Jalil Hasan விவரித்தார்.