Latestமலேசியா

லஹாட் டத்துவிலுள்ள போலீஸ் வேன் மீது மரம் விழுந்தது; போலீஸ் காப்ரல் மரணம்

லஹாட் டத்து, ஜூன் 22 – லஹாட் டத்துவிலுள்ள பெல்டா திட்டத்தில் போலீஸ்வேன் மீது மரம் விழுந்ததால் அதனை ஓட்டிச் சென்ற போலீஸ் Corporal மரணம் அடைந்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே 44 வயதுடைய அந்த போலீஸ் காப்ரல் இறந்ததாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் சுல்பஹரின் இஸ்மாயில் ( Dzulbaharin ismail ) தெரிவித்தார்.

பொது நடவடிக்கை படையின் கொம்தெக் Sahabat 16 இடத்திலிருந்து Pantai 16 இடத்திற்கு அந்த போலீஸ் காப்ரல் வேனை ஓட்டிச் சென்றபோது சாலையின் இடது பகுதியிலிருந்த மரம் திடீரென அந்த வேன் மீது விழுந்ததை எதிரேயுள்ள சாலையில் போலீஸ் Scrambler மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மற்றொரு போலீஸ்காரர் கண்டதாக சுல்பஹரின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!