
பொந்தியான், ஏப் 22 அஞ்சல் நிலையத்தில் கட்டணங்களை செலுத்தச் சென்ற பெண்மணி ஒருவர் போலி லாட்டரி மோசடி திட்டத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த 70,000 ரிங்கிட்டை இழந்தோதார். இந்னேசிய ஆடவர் ஒருவர் தமக்கு லாட்டரியில் 10 லட்சம் ரிங்கிட் கிடைத்திருப்பதால் அடையாளக் கார்டு இல்லையென்பதால் அப்பணத்தை மீட்க முடியவில்லை என்பதோடு அந்தப் பணத்தை மீட்பதாக இருந்தால் பேங்க் நெகாராவுக்கு 80,000 ரிங்கிட் செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளார். அதோடு லாட்டரியில் விழுந்த பணம் கிடைத்தவுடன் 50,000 ரிங்கிட் தொகையை வழங்குவதாகவும் அப்பெண்ணுக்கு உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய அப்பெண் தமது வங்கிக் கணக்கின் விவரங்களை அந்த ஆடவனுக்கு தெரிவித்தால் அதிலிருந்த சேமிப்பு பணம் அனைத்தையும் அவர் இழந்தார்.