
கோலா திரெங்கானு, நவ 1 – கோலா திரெங்கானுவில் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 65 வயது மூதாட்டி தனது வணிக தோழியால் காரில் மோதப்பட்டு 15 முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக போலிஸ் கண்டு பிடித்துள்ளது.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அப்பெண் இறந்த மூதாட்டியோடு செய்து வரும் வணிகத்தில் லாபத்தை பங்கு கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சம்பவத்தின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே தான் ஓட்டிவந்த ஹோண்டா ஜாஸ் (Honda Jazz) காரால் மோதியப்பின் 15 முறை இறைச்சி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக திரெங்கானு போலிஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.
இருவரும், தூடோங் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றம் கொண்டு செல்லவிருப்பதாக மஸ்லி தெரிவித்தார்.