லாபுவான், மே 10 – உல்லாச பாய்மரப் படகில் Sweden ஆடவர் ஒருவர் Labuan Kampung Patau – Patau கடல பகுதிக்கு அருகே இறந்து கிடந்தார்.
55 வயதுடைய Dick Thomas என்று அடையாளம் கூறப்பட்டவரின் உடலைக் கண்ட பொதுமக்கள் இரவு 7.16 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மரணம் அடைந்தவரின் சடலத்தை அந்த பாய்மர படகிலிருந்து அகற்றுவதற்கு போலீஸ் மற்றும் தீயைணப்பு படையினருக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்ததாக Labuan போலீஸ் தலைவர் Superintendan Mohd Hamizi Halim தெரிவித்தார்.
கடலில் அந்த படகை செலுத்திக் கொண்டிருந்தபோது Dick Thomas மரணம் அடைந்ததாகவும் சவ பரிசோதனைக்குப் பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என Mohd Hamizi கூறினார்.