Latestமலேசியா

லாரியில் பினாங்கிற்கு செல்லும் டைனோசர்கள் ! வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஜோர்ஜ்டவுன், பிப் 3 – கடந்த சில தினங்களாக, இரு டைனோசர்கள் லாரி ஒன்றில் ஏற்றப்பட்டு, பினாங்கிற்கு கொண்டு செல்லப்படுவதுபோல் காட்டப்படும் குறுகிய காணொளி ஒன்றை , சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.

பினாங்கு பாலத்தைக் கடந்து செல்லும் T-Rex வகையைச் சேர்ந்த அவ்விரு டைனோசர்களும் மிக குதூகலத்துடன் இருக்கும் காட்சி , வலைத்தளவாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது.

அந்த காட்சி உண்மை இல்லை என்றாலும், தத்ரூபமாக இருக்கும் அந்த காணொளி விளம்பர நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதாகும். கொம்தார் கட்டடத்தில் உள்ள The Top Themepark விளையாட்டுப் பூங்காவை விளம்பரப்படுத்தும் முயற்சியாகவே, அத்தகைய காணொளியை தயாரித்திருப்பதாக, Top@Komtar நிறுவன நடவடிக்கை பிரிவின் இயக்குநர் கெவின் லாய் ( Kevin Lai) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!