புத்ராஜெயா, செப்டம்பர் 25 – ‘லாலிபாப்’ வடிவில் போதைப் பொருள் விற்பனை செய்த டிக்டோக் கணக்கு தளம் ஒன்று, அகற்றப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார்.
‘Thai Lollipop’ அல்லது ‘Candy Fun’ என்று அழைக்கப்படும் அந்த போதைப்பொருள் இளஞ்சிவப்பு monster வடிவமைப்புடன் பழுப்பு அல்லது ஊதா நிறத்தில் உள்ளது இருப்பதாக அவர் கூறினர்.
அதில், ஹாலுசினேஷன், சுவாச பிரச்சனை மற்றும் மரணம் விளைவிக்கக்கூடிய nimetazepam, tramadol, ketamine, அல்லது flunitrazepam போன்ற போதைப்பொருள்கள் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை அந்த டிக்டோக் கணக்கை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் உறுதி செய்தார்.
இதனிடையே, MACC, டிக்டோக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, இதுபோன்ற கணக்குகள் எவ்வாறு செயல்பட முடிந்தது என்பதையும் கண்டறியும் என அமைச்சர் குறிப்பிட்டார்
அதேவேளையில், டிக்டோக்கில் மட்டுமின்றி, இதேபோன்ற முறையில் போதைப்பொருட்களை விற்க முயற்சிக்கும் வேறு தரப்பினரையும் அடையாளம் காண MACCசியின் விசாரணையை விரிவுபடுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.