லாவாஸ், பிப் 26- சரவாக், லாவாஸ், Kampung Seberang Kedaiயில் உள்ள இரட்டை மாடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்றிரவு 11.02 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கிட்டதட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், நிகழ்ந்த அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வீடு முற்றாக அழிந்தது. மேலும், இறந்த 4 முதல் 8 வயதுக்குட்பட்ட அந்த மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை தலைவர் Tiong Ling Hii தெரிவித்தார்.
இந்நிலையில், அதே வீட்டிலிலிருந்த அந்தச் சிறுவர்களின் பெற்றோர் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.