Latestஉலகம்

லாஸ் வெகாஸில் மாணவனை தாக்கி மரணம் ஏற்படுத்திய பதின்ம வயதுடைய எண்மர் கைது

லாஸ் வெகாஸ், நவ 16 – லாஸ் வெகாஸில் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவனை தாக்கி மரணம் ஏற்படுத்தியது தொடர்பில் பதின்ம வயதுடைய எட்டு பையன்களை போலீசார் கைது செய்தனர். ஜொனாதன் லூயிஸ் என்ற மாணவன் மரணம் தொடர்பில் மேலும் இரண்டு நபர்களை தேடும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கை தொலைபேசி தொடர்பாக எழுந்த தகராறினால் 17 வயதுடைய மாணவனை 10 பேர்கொண்ட கும்பல் தாக்கி மரணம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. நவம்பர்
1 ஆம் தேதி நிகழ்ந்த இந்த தகராறு தொடர்பான காணொளி வைரலானது. கைது செய்யப்பட்ட எட்டு பையன்களும் 13 முதல் 17 வயதுடையவர்கள் என லாஸ் வெகாஸ் போலீஸ் அதிகாரி லெப்டினன்ட் ஜேசன் ஜோஹன்சன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!