Latestமலேசியா

லிம் கிட் சியாங், நிக் அஸிஸ் , நீதிபதி நளினி பத்மநாதன் உட்பட 26 பேருக்கு டான்ஸ்ரீ விருது

கோலாலம்பூர், ஜூன் 5 – DAP யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் , பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவரும் கிளந்தான் முன்னாள் மந்திரிபெசாரான காலஞ்சென்ற நிக் அஸிஸ், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் ,
சபா சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, உட்பட 26 பேர் இன்று மாட்சிமை தங்கிய பிறந்தநாளை முன்னிட்டு டான்ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஸாவாவி சலே, முன்னாள் அமைச்சர்களான வான் ஜூனைடி, ஹனிபா அமான் , நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துல், கடற்படை தளபதி Rahman Ayob,ராணுவ தலைவர் Mohamad Abul Rahman ஆகியோரும் PSM என்னும் கூட்டரசு அரசாங்கத்தின் இரண்டவாது உயரிய விருதான டான்ஸ்ரீ விருதை பெற்றனர்.

இதனிடையே டத்தோ எனப்படும் PJN விருதை 28 பேரும், PSD எனப்படும் டத்தோ விருதை நால்வரும் பெற்றனர். முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டாளர்களான Ng Boon Bee, Teh Kew San. Bille Ng. Tan Yee Khan,
Yew cheng Hoe, Tan Aik Huang ஆகியோரும் PJN விருது பெற்றனர். 1967 ஆம் ஆண்டு மலேசியா தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய NG Boon Bee தமது 84ஆவது வயதில் கடந்த ஆண்டு காலமானார். மாட்சிமை தங்கிய பேரரசரின் பிறந்த நாளை முன்னிட்டு மொத்தம் 839 பேர் பட்டங்கள் மற்றும் விருதுகளை பெற்றனர். அவர்களில் பல தொழில் அதிபர்களும் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!