
பெங்களூரு, ஆகஸ்ட்டு 30 – இந்தியா, கர்நாடகா மாநிலத்தில், தன்னுடன் “லிவிங்-டுகெதரில்” வாழ்ந்து வந்த பெண்ணை, சமையலுக்கு பயன்படுத்தும் பிரஷர் குக்கரால், சாகும் வரை கொடூரமாக அடித்து கொன்ற 29 வயது ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த சனிக்கிழமை மாலை வாக்கில், தாக்குதலுக்கு இலக்கான சம்பந்தப்பட்ட பெண், கடுமையான இரத்தப் போக்கால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த, வைஷ்ணவ் எனும் அந்த ஆடவனும், 24 வயது தேவ் எனும் பெண்ணும், கடந்த ஈராண்டுகளாக, பெங்களூருவில், வாடகை வீடொன்றில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
கல்லூரியில் அறிமுகமான அவர்கள் இருவரும், நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, பிரஷர் குக்கரால் தேவ்வை அடித்துக் கொன்ற வைஷ்ணப் தப்பியோடி விட்டான்.
தேவ்வுக்கு கள்ளக் காதலர் இருப்பதாக, சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக அவருடன் சண்டையிட்டு வந்த வைஷ்ணப் இறுதியில் அடித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது.