
லண்டன், ஏப் 27 – இன்று அதிகாலையில் நடைபெற்ற இங்கிலாந்து பிரிமிர் லீக் ஆட்டத்தில் அர்செனல் குழுவை 4 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் லீக் விருதை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பை Manchester city பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் Kevin De Bruyne இரண்டு கோல்கள் அடித்தன் மூலம் Manchester City யின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தற்போது இரண்டு கூடுதல் புள்ளிகளுடன் லீக் பட்டியலில் Arsenal முதலிடத்தில் இருந்தபோதிலும் Manchester City யின் கைவசம் இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் அந்த அணி இம்முறையும் இங்கிலாந்து பிரிமியர் லீக் வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக் கொள்வது கிட்டத்தட்ட உறுதியென கூறப்படுகிறது.
இதனிடையே இன்று அதிகாலையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் Liverpool 2-1 என்ற கோல் கணக்கில் West Ham அணியை வென்றது. தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை John Matip தலையால் முட்டி கோலாக்கியதால் இந்த ஆட்டத்தில் Liverpool அணி வெற்றி பெற்றது.