Latestமலேசியா

லீ சீ ஜியா கொமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கமாட்டார்

கோலாலம்பூர், ஜூன் 23 – 2022 கொமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்பதில் இருந்து நாட்டின் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளரான Lee Zii Jia விலகிக் கொண்டார்.

அண்மைய காலமாக தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டிருப்பதாலும், அடுத்து தொக்யோ உலக பூப்பந்து போட்டியில் கவனம் செலுத்தவிருப்பதாலும், தாம் அந்த முடிவை எடுத்திருப்பதாக Lee Zii Jia தெரிவித்தார்.

கொமன்வெல்த் போட்டியில் தாம் பங்கேற்கா விட்டாலும், ஜூன் 28 தொடங்கும் மலேசிய பொதுவிருது போட்டியிலும், ஜூலையில் நடைபெறும் Masters Malaysia போட்டியிலும் தாம் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போவதாக , தனது ரசிகர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!