
சிரம்பான், பிப்ரவரி-4 – போர்டிக்சன், லுக்குட், சிலியாவ் செம்பனைத் தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடைந்த குழாயைப் பழுதுபார்க்கச் சென்ற பணியாளர்கள் அதனை கண்டெடுத்து நேற்று காலை தகவல் கொடுத்ததாக, போர்டிக்சன் போலீஸ் துணைத் தலைவர் Muhamad Mustafah Hussin கூறினார்.
ஒரு மண்டை ஓடும் சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
எனினும் சம்பவ இடத்தில் ஆடைகளோ, அடையாள ஆவணங்களோ, ஆயுதமோ எதுவும் காணப்படவில்லை.
குற்ற அம்சங்களுக்கான தடயங்களும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.