Latestமலேசியா

லுமுட்டில் 13,000 லிட்டர் டீசல் பறிமுதல்

ஈப்போ, மே 10 – லுமுட்டில் kampung Acheh வில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் உதவி தொகைக்கான 13,000 லிட்டர் டீசல் எண்ணெயை உள்நாடு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அதன் பேரா மாநில இயக்குநர் டத்தோ Kamalludin Ismail தெரிவித்தார்.

நேற்று நண்பகல் மணி 12 50 அளவில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்ட இடம் டீசல் கிடங்காக இருப்பதற்காக பெர்மிட் வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் உதவி தொகையில் வாங்கப்பட்ட டீசலை ஆதாயத்திற்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக Kamalludin தெரிவித்தார். டீசல் கிடங்கின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்து 41,913 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு டாங்குகள் , இயந்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!