Latestமலேசியா

லுமூட்டில், இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து; பிரதமர் இரங்கல், விசாரணை வாரியம் அமைக்கப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல் 23 – பேராக், லுமூட்டில், அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதயத்தை உலுக்கும் அவ்விபத்து ஒரு பேரிழப்பு எனவும், அது ஒட்டு மொத்த மலேசியர்களையும் துயரத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் பிரதமர் சொன்னார்.

அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு, அந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்க வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இவ்வேளையில், அவ்விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு விசாரணை வாரியம் ஒன்று அமைக்கப்படுமென, TLDM எனப்படும் அரச மலேசிய கடற்படை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

இன்று காலை மணி 9.32 வாக்கில், பேராக், லுமுட்டிலுள்ள, அரச மலேசிய கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த HOM-AW139 ரக ஹெலிகாப்டரும், Fennec ஹெலிகாப்டரும் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!