பெய்ரூட், செப்டம்பர் -24 – லெபனானில் ஹிஸ்புல்லா தரப்பை குறி வைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 58 பெண்களும், 35 சிறார்களும் அடங்குவர் என லெபனானிய அதிகாரத் தரப்புக் கூறியது.
மேலும் 1,645 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனானில் உள்நாட்டு போர் வெடித்ததிலிருந்து பதிவான ஆக அதிகமான தினசரி உயிரிழப்பு இதுவாகுமென சுகாதார அதிகாரிகள் கூறினர்.
இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து தெற்கிலிருந்து மேற்கு லெபனானுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடியுள்ளனர்.
அவர்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பள்ளிக்கூடங்களும் இதர கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்ததிலிருந்து, ஹிஸ்புல்லா தரப்புக்கும் இஸ்ரேலுக்கும் எல்லைத் தகராறு மூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.