Latestமலேசியா

லைசென்ஸ் இன்றி மோட்டாசைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதித்த தாய்க்கு சம்மன் மகன் கைது

குளுவாங், மே 3- லைசென்ஸ் இல்லாத மகனுக்கு தனது மோட்டார் சைக்கிளை ஓட்டுவதற்கு அனுமதித்த தாய் ஒருவக்கு சம்மன் வழங்கிய போலீசார், அவரது 17 வயது மகனை குளுவாங் தாமான் குளுவாங் பாராட்டில் கைது செய்தனர். Lingkaran Tengah, Taman Kluang Perdanaவில் மோட்டார் சைக்கிளோட்டியபோது அந்த இளைஞர் சூப்பர்மேன் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி வைரலானத் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அந்த இளைஞர் தமது வீட்டில் கைது செய்யப்பட்டதோடு அவர் ஓட்டிய Modenas Kriss மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!