கோலாலம்பூர், ஆகஸ்ட்-19, வயது குறைந்த பிள்ளைகள் லைசென்ஸ் மற்றும் சாலை வரி இல்லாமல் மோட்டார் சைக்கிளோட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் கடும் தண்டனை காத்திருக்கிறது.
2001 சிறார் சட்டம், 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென, புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி (Datuk Seri Mohd Yusri Hassan Basri) எச்சரித்தார்.
பிள்ளைகள் சட்டத்தை மீறி செயல்படாதிருப்பதை உறுதிச் செய்ய, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களது கடமை.
எனவே அத்தவற்றைப் புரியும் 16 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளுடன், பெற்றோர்களும் தண்டனையை அனுபவிக்க தயாராக வேண்டி வருமென்றா அவர்.
சுங்கை பூலோவில் 13 வயது நண்பர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் wheelie சாகசத்தில் ஈடுபட்ட போது, ஒன்றோடு ஒன்று மோதி இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் கருத்துரைத்தார்.
அதில் பெற்றோர்களின் அலட்சியமும் கவனக்குறைவும் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பமென சுங்கை பூலோ போலீஸ் தரப்பில் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.