
ஜோர்ஜ் டவுன் , ஏப் 4 – இன்று விடியற்காலையில் பினாங்கு துன் டாக்டர் Lim Chong Eu நெடுஞ்சாலையில் கார் ஒன்று கவிழ்ந்து லோரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் அக்கார் ஓட்டுனர் S . Vitra Stevan மரணம் அடைந்தார். மருத்துவ பணியாளரான அவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார். இன்று விடியற்காலை மணி 4.19 அளவில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்த சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது கார் ஓட்டுனர் தமது இருக்கையில் சிக்கி இறந்து கிடந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நடவடிக்கை பேச்சாளர் தெரிவித்தார். சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி அவரது உடல் மீட்கப்பட்டு சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அந்த பேச்சாளர் கூறினார்.