
கோலாகங்சார், மே 13 – பிளஸ் நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை மணி 2.46 அளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோரியின் பின்புறப் பகுதியில் விரைவு பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 26 பயணிகளுடன் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சென்டரலுக்கு அந்த விரைவு பஸ் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தின்போது பயணிகள் எவரும் பஸ்ஸில் சிக்கிக்கொள்ளவில்லையென கோலாலகங்சார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி Saiful Hanif Mahmad Ayub தெரிவித்தார்.