Latestமலேசியா

1மில்லியன் ரிங்கிட் போலி பணக் கோரிக்கை மூத்த அமலாக்க அதிகாரி கைது

கோலாலம்பூர், மார்ச் 26 – நான்கு ஆண்டுகளுக்கு முன் 1மில்லியன் ரிங்கிட் போலி பணக் கோரிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக மூத்த அமலாக்க அதிகாரி உடபட மூவரை கைது செய்த MACC, விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்களை ஆறு நாட்களுக்கு தடுத்து வைத்துள்ளது. சேவை நிறுவனத்தின் தலைவருமான அந்த மூத்த அமலாக்க அதிகாரி மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தடுத்துவைப்பதற்கு MACC க்கு அலோஸ்டார் மாஜிஸ்திரேட் Siti Norhidayah Noor அனுமதி வழங்கினார்.

2020ஆம் ஆண்டில் அமலாக்க நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலின் பராமரிப்பு வேலைக்காக போலீ பணக் கோரிக்கை தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழிகள் உடந்தையாக இருந்ததாக MACC தகவல்கள் கூறின. அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் நேற்றிரவு 8மணியளவில் கெடா MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது கைது செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் ஏமாற்றம் நோக்கத்தை கொண்டிருந்ததாக அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!