கோலாலங்காட், பிப் 18 – SKVE நெடுஞ்சாலையின் 46 ஆவது கிலோமீட்டரில் லோரியிலிலிந்து கழன்ற டயர் ஒன்று மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரின் மேல் மோதியதில் அவர் மரணம் அடைந்தார்.
போர்ட் கிள்ளானிலிருந்து ஷா ஆலாம் சென்றுகொண்டிருந்த லோரியிலிருந்து வெளியேறிய டயர் சாலையின் எதிரே சென்று கொண்டிருந்த அந்த 40 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியின் மீது மோதியதாக கோலாலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்ட் Kamalariffin Aman தெரிவித்தார்.
அந்த ஆடவர் Saujana Putra விலிருந்து போர்ட் கிள்ளானுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்தால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக kamalariffin Aman கூறினார்.