Latestமலேசியா

லோரியிலிருந்து விழுந்த இரும்பு கம்பி காருக்குள் இருந்த ஆடவரின் கையில் குத்தியது

குவந்தான், மே 9 – லோரியிலிந்து விழுந்த இரும்பு கம்பி ஒன்று ஆடவரின் கையில் குத்தியதில் அவர் இடது கை மற்றும் விலா எலும்பில் காயம் அடைந்தார். குவந்தான் Jalan Pantai Sepat ட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். 45 வயதுடைய Jamaluddin Amin உடனடியாக Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பிற்பகல் 3.30 மணியளவில் 0.75 மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி கீழே விழுந்து, பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற அல்சா காரின் கண்ணாடியை ஊடுருவி, அவரது கை மற்றும் இடது விலா எலும்பில் தாக்கியது. Jamaludin Penur ரிலிருந்து தஞ்சோங் Lumpur ரை நோக்கிச் செல்லும் வழியில் அந்த காரை ஓட்டிச் சென்றபோது இந்த பாதிப்புக்கு உள்ளானார்.

பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்திய அலட்சியத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 337வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த லோரி மற்றும் அதன் ஓட்டுனரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அந்த லோரி பச்சை நிறத்தில் இருப்பதாக நம்பபப்படுவதாக Wan Mohd கூறினார். கழிவு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ரோரோ வகை லாரியான அதன் பதிவு எண்ணைக் கண்டறிய முடியவில்லை. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் போலிசுடன் தொடர்புகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!