Latestமலேசியா

லோரியில் மோதியதைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

கோலாலம்பூர், மார்ச் 18 – சுங்கை பூலோவுக்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 425. 3 ஆவது கிலோமீட்டரில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் லோரியில் மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார். இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சுங்கைபூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்களில் அறுவர் சென்றடைந்தபோது 26 வயதுடைய இளைஞர் ஓட்டிச் சென்ற Demak மோட்டார்சைக்கிள் லோரியின் பின்புறம் மோதியதால் கடுமையான காயத்திற்குள்ளான அந்த இளைஞர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!