ஈப்போ, மார்ச் 3 – சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற டிராய்லர் லோரி கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. பிளஸ் நெடுஞ்சாலையின் 306ஆவது கிலோமீட்டரில் இன்று நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் 28 வயதுடைய இளைஞரான லோரி ஓட்டுனர் அதன் இருக்கையில் சிக்கிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோப்பேங் மற்றும் சிம்பாங் பூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகை புரிந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
‘வாகனத்தை வெட்டும் சிறப்புக் கருவியை பயன்படுத்தி அந்த லோரி ஓட்டுனரை அவர்கள் மீட்டனர். காலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.