Latestமலேசியா

லோரி ‘bucket’-ல் சிக்கி பரிதாபமாக மரணம்

படவான், செப் 22- வேலை முடிவதற்கு முன்பு தனது லோரியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது 10 டன் எடையுள்ள லாரியின் ‘பக்கெட்’ சாய்ந்ததில் தலை நசுங்கி லோரி ஓட்டுனர் Chin Hung Joon இறந்தார். சரவாக்கில் படவானில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததை படவான் மாவட்ட போலீஸ் தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad உறுதிப்படுத்தினார். சோதனையின் போது சின் ஹங் ஜூன் ஹைட்ராலிக் கேபிள் தொட்டதாகவும், இதனால் லாரியின் ‘bucket’ சாய்ந்ததில் அவர் கடுமையாக காயம் அடைந்தார். அதோடு லோரியின் பாதுகாப்பு ‘சோக்’ கூட தயார் நிலையில் வைக்கப்படவில்லை என சின் ஹங் ஜூனின் சகோதரர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!