கோலாலம்பூர், பிப் 21 – தனது பிள்ளைகளை மீட்கும் லோ சியு ஹொங்கின் ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றே ஆகும். அந்த முடிவினால் தாம் அதிர்ச்சி அடையவில்லை என பெர்லிஸ் சமயத் தலைவர் அஸ்ரி சய்னூல் அபிடின் (Asri Zainul Abidin) தெரிவித்தார்.
லோவின் பிள்ளைகள் முஸ்லிம்களாகவே இருக்க விரும்பினால் , சட்டப்படி அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து தற்போது தமது தரப்பு இதர வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
பிள்ளைகள் யாரிடம் இருக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சனையல்ல ; அவர்களின் சமயத்தையே தாங்கள் தற்காக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.