Latestமலேசியா

முஸ்லிம்களை குழப்பும் சமய போதகர்கள்; மலாய் ஆட்சியாளர்கள் பரிசீலிக்க வேண்டும் – Zaid Ibrahim

கோலாலம்பூர், மார்ச் 7 – கடைகளில் விற்கப்படும் பீர் போட்டல்களை அங்கு வேலை செய்யும் முஸ்லிம் பணியாளர்கள் தொடாமல் இருக்க இனி அவை வெண்டிங் மெசின் எனப்படும் தானியங்கி பட்டுவாடா இயந்திரம் மூலம் விற்கப்பட பரிந்துரை செய்திருக்கும் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினரை மேற்கோள்காட்டி முன்னாள் அமைச்சர் Zaid Ibrahim கிண்டலாக பல கேள்விகளைக் கேட்டு பதிவிட்டுள்ளார்.

இப்பரிந்துரையை வரவேற்றிருக்கும் Zakim மிக விரைவில் அதை அமல்படுத்தக்கூடும் என கூறிய அவர் அப்படியென்றால் இனி பீர் போத்தல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மலாய்க்காரர்கள் ஓட்ட அனுமதிக்ககூடாது என்றார்.

அதே போல் சுங்கத்துறையில் பீர் அடங்கிய பெட்டிகளை பரிசோதிக்கவும் மலாய் அதிகாரிகளை அனுமதிக்கக்கூடாது.

நிதியமைச்சிலும் ஹாலால் அல்லாத வணிக நடவடிக்கைகளைக் கவனிக்க அதிகமான முஸ்லிம் அல்லாதவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.

அண்மையில் ஒரு சமய போதகர், முஸ்லிம் வடிவமைப்பாளர்கள் கோயில் வடிவமைப்புகளை வரையக் கூடாது என ஆலோசனை கூறியிருந்தார். இன்னொரு சமய அமைப்பு முஸ்லிம்கள் பாரம்பரிய வங்கிகளில் வேலை செய்யக் கூடாது என கூறியிருந்தது.

இப்படி ஆயிரக்கணக்கான போதகர்கள் முஸ்லிம்களுக்கு பல்வேறு இலவச அறிவுரைகளை வழங்குகின்றனர். இது மலாய்க்கார சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால் வருகின்ற மலாய் ஆட்சியாளர் கூட்டத்தில், அரசாங்கம் இவ்விவகாரம் பற்றி பேச முன்னெடுப்பு செய்ய வேண்டும் என Zaid அப்பதிவில்
வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!