கோலாலம்பூர், பிப் 17 – தங்களது தாயார் Loh Siew Hong பங்கேற்காமலேயே வயது குறைந்த அவரது மூன்று பிள்ளைகளும் இஸ்லாமியர்கள் என பெர்லீஸ் மாநில சமயத்துறையில் பதிவு செய்யப்பட்டதாக அம்மாநில முப்தி Mohd Asri Zainul Abidin தெரிவித்தார். Loh Siew Hong எங்கே என அந்த பிள்ளைகளின் தந்தையிடம் கேட்கப்பட்டது என்பதையும் முகமட் Asri உறுதிப்படுத்தினார். இஸ்லாத்தில் இணைவதற்காக அந்த பிள்ளைகளை அவர்களது தந்தை 2020 ஆண்டு ஜூலை மாதம் பெர்லீஸ் சமயத்துறைக்கு அழைத்து வந்தார். அவர்கள் குறைந்த வயதில் இருந்தனர் என தமது முகநூலில் Mohd Asri பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த பிள்ளைகளின் தாயர் எங்கே என்று நாங்கள் கேட்டோம். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லையென அவர் மறுமொழி தெரிவித்தார். அவரது பிள்ளைகளை இஸ்லாத்தில் சேர்க்க வேண்டுமென அந்த பிள்ளைகளின் தந்தை கேட்டுக்கொண்டார். அதனத் தொடர்ந்து பெர்லீஸ் சமயத்துறையில் அந்த பிள்ளைகள் இஸ்லாமியர்கள் என பதிவு செய்யப்பட்டதே தவிர தேசிய பதிவுத் துறையில் அல்ல என Mohamad Asri விவரித்தார்.
அதேவேளையில் அந்த பிள்ளைகளை பராமரிக்கும் உரிமை அவரது தாயாருக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து பெர்லீஸ் சமயத்துறைக்கு தெரியாது. அப்போது அந்த பிள்ளைகள் பெர்லீசில் இருந்தனர். பிள்ளைகளின் தந்தை சிறையில் இருந்ததால் மதம் மாறிய அந்த பிள்ளைகளை நாங்கள் கவனித்து வந்தோம் என Mohd Asri கூறினார்.