
கோலாலம்பூர், நவ 21 – வங்காளதேச ஆடவர் தலைமையிலான போலி கடப்பிதழ் கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது. நேற்று கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வங்காளதேசத்தை சேர்ந்த 26 வயது மற்றும் 33 வயதுடைய மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 61 வங்காளதேச கடப்பிதழ்களை வைத்திருந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கெப்போங் வர்த்தக பூங்காவுக்கு அருகே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலியானது என நப்பப்படும் 43 இந்தேனோசிய கடப்பிதழ்கள் மற்றும் மியன்மார் கடப்பிதழ் ஒன்றும் பறிமுதல் செய்ப்பட்டது.
ஜாலான் கெப்போங்கிலுள்ள அடுக்ககம் ஒன்றில் 33 வயதுடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். போலி கடப்பிதழ் கும்பலின் பின்னனியாக செயல்பட்ட அந்த நபரிடம் 15 போலி கடப்பிதழ்கள் இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு பிரிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். கடந்த ஒரு ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் இக்கும்பல் மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கியோரிடம் 500 ரிங்கிட் முதல் 700 ரிங்கிட் கட்டணத்தை வசூலித்து வந்ததாக செய்தியாளர் கூட்டத்தில் ருஸ்லின் தெரிவித்தார்.