ஈப்போ, பிப் 10 – சிம்பாங் பூலாய்க்கும் கேமரன் மலைக்குமிடை உள்ள Pos Raya பூர்வகுடியினர் வசிப்பிடப் பகுதியில் வங்காளதேச பிரஜை ஒருவரை புலி அடித்துக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவலை போலீஸ் மறுத்துள்ளது. மனித எலும்புக்கூடு கொண்ட ஒரு புகைப்படத்துடன் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ Mior Faridalathrash Wahid தெரிவித்தார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் பேரா மாநிலத்தில் அப்படியொரு சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. அதோடு புலி அடித்து வங்காளதேச பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக எந்தவொரு போலீஸ் புகாரையும் மாவட்ட போலீஸ் தலைமையகம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago