Latestஉலகம்

வங்காளதேச இடைக்கால அரசுக்குப் பொறுப்பேற்றார் நோபல் பரிசு வெற்றியாளர் முகமது யூனுஸ்

டாக்கா, ஆகஸ்ட்-9, வங்காளதேசத்தில் அமைந்துள்ள புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு வென்றவரான 84 வயது முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.

டாக்காவிலுள்ள அதிபா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முகமது யூனுஸுக்கு அந்நாட்டு அதிபர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இடைக்கால அரசின் உறுப்பினர்களாக யூனுஸுடன் 17 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வரலாறு காணாத கலவரம் மற்றும் வன்முறைகளை நிறுத்தி அந்த விரிகுடா நாட்டில் மீண்டும் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதே யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் பெரும் சவாலாகும்.

சமூக அக்கறைக் கொண்ட தொழிலதிபர், பொருளாதார மேதை, ஏழைகளின் நலன் காக்கும் வங்கியாளர் என்ற பன்முகத் தன்மையுடைய யூனுஸ் வங்காளதேச மக்கள் குறிப்பாக மாணவர் சமூகத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.

பரம ஏழைகளுக்கு குறுங்கடன் (Micro finance) தரும் முறைக்கு அந்நாட்டில் முன்னோடியாக இருந்த கிராமீன் வங்கியை (Grameen Bank) நிறுவியதற்காக 2006-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற யூனுஸ் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக முன்னதாக செய்திகள் வெளியானதால், அவரின் செல்வாக்கை ஒடுக்க, அப்போதையப் பிரதமர் ஷேக் ஹசீனா சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!