கோலாலம்பூர், பிப் 16 – மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் தூதர் Mohamed Khairuzzaman விடுதலை செய்யப்பட்டார்.
Mohamed Khairuzzaman னை நாட்டிலிருந்து வெளியேற்றுவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றத்தில் பெறுவதில் அவரது வழக்கறிஞர் Ngeow Chow Ying நேற்று வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து புத்ரா ஜெயா குடிநுழைவு தலைமையகத்தில் கைருல்ஷாமான் இன்று விடுதலை செய்யப்பட்டார் . அந்த முன்னாள் தூதர் மலேசியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார்.
கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக அகதியாக இருந்துவரும் கைருல்ஷாமான் அம்பாங்கிலுள்ள அவரது இல்லத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குடிநுழைவு விதிகளை மீறவில்லை என்பதால் அவர் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.