Latestமலேசியா

ஜப்பானின் வட பகுதியில் ரெக்டர் கருவியில் 6.1 அளவில் பதிவான நில நடுக்கம் உலுக்கியது

தோக்யோ, ஏப் 2 – ஜப்பானின் வட பகுதியிலுள்ள Aomori வட்டாரத்தில் நேற்றிரவு பின்னேரத்தில் ரெக்டர் கருவியில் 6.1அளவில் பதிவான நிலநடுக்கம் உலுக்கியது. ஜப்பானிய தலைநகர் தோக்யோவிலிருந்து கிழக்கே தென் Ibarak கில் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உலுக்கியபோதிலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதுவரை சேதம் மற்றும் காயங்கள் குறித்து விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் Tokyo வுக்கும் ஜப்பானின் வடகிழக்கு வட்டாரமான Fukushima வட்டாரத்திற்குமிடையிலான Bullet எனபடும் அதிவேக ரயில் சேவையின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அந்த வட்டாரத்தில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக NHK தகவல் வெளியிட்டது. இதனிடையே நிலநடுக்கத்தினால் Ibaraki யிலுள்ள Tokai Daini யிலுள்ள அணுஉலை நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென அணு உலை வாரியத்தின் அதிகாரி Hiroyiki Sanada தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் 1,500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஜப்பானை உலுக்கி வருகின்றன. உலகின் நிலநடுக்க பேரிடர்களில் 18 விழுக்காடு ஜப்பானில் ஏற்பட்ட போதிலும் அவை பெரும்பாலும் மிதமான அளவை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!