
கோலாலம்பூர், ஜன 21 – தலைநகர் புக்கிட் பிந்தாங், ஜாலான் இம்பியில் அமைந்திருக்கும் Berjaya Times Square பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், வங்காளதேச நாட்டவர்கள் வழிநடத்தி வந்த 9 கடைகளை, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் நேற்று இழுத்து மூடியது.
வெளிநாட்டவர்கள் வழிநடத்தி வந்த துணி, கைப்பை, கைபேசிக்கான பொருட்கள், உணவு கடைகள் ஆகியவற்றிலும் அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக DBKL தமது முகநூல் அகப்பக்கத்தில் தெரிவித்தது.
வர்த்தகம் செய்ய அனுமதி இல்லாதது, அனுமதியில்லாத உதவியாளரை பணிக்கு அமர்த்தியது, அனுமதி விதிமுறையை மீறியது என அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அம்மன்றம் குறிப்பிட்டது.
இவ்வேளையில், வெளிநாட்டவர்கள் நடத்தும் வியாபார தளங்களில் தொடர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென DBKL கூறியது.