
தெலுங்கானா, செப் 4 – கொள்ளையடிக்க வங்கியின் பூட்டை சாமர்த்தியமாக உடைத்து உள்ளேச் சென்ற திருடன் அங்கு பணம் எதனையும் கண்டு பிடிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தது ஒரு புறம் இருக்க ஒரு செய்திதாளில் “நல்ல வங்கி” என எழுதி அங்கீகாரம் கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியா தெலுங்லானாவில் உள்ள ஓர் அரசு வங்கியில் நடந்தேறியுள்ளது.
வீட்டிலிருந்து செயல்படும் அந்த வங்கியில் காவலாளி யாரும் இல்லாதலால் திருடன் முன்பூட்டை உடைத்து உள்ளேச் சென்றுவிட்டான்.
ஆனால் அங்குள்ள வாடிக்கையாளர் முகப்பிடம், வங்கி ஊழியர் மேசைகள் அனைத்தையும் துலாவிப் பார்த்ததில் பணம் ஏதும்
கிடைக்கவில்லை.
பின்னர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டிகளை எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை.
அதனால் செய்திதாளில் “எனக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.என்னை பிடிக்க முயலாதீர்கள்.
என்னுடைய கை ரேகை எங்கும் பதிவாகவில்லை. நல்ல வங்கி” என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான்.
தற்போது போலிசார் CCTV காமிரா வழி திருடன் யார் என்று தடயம் ஏதும் கிடைக்குமா என விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.