
நியு யோர்க், மார்ச் 23 – அமெரிக்காவில் வங்கி துறை நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில், அந்நாட்டின் மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கின்றது.
விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒன்பதாவது முறையாக தொடர்ச்சியாக மத்திய வங்கி, கடன் வாங்குவதற்கான வட்டியை அதிகரித்திருக்கின்றது.
வட்டி விகித உயர்வதால், வீட்டுக்கான கடன் , வர்த்தகத்தை விரிவுப்படுத்த அல்லது புதிய கடனை பெறுவதற்கான செலவு அதிகரிக்கும்.
இந்த செலவுகள் அதிகரிக்கும்போது, தேவைகள் குறைந்து விலைகளை கட்டுப்படுத்த முடியுமென மத்திய வங்கி கூறியுள்ளது.