
கோலாலம்பூர், மார்ச் 3 – தலைநகரில் உள்ள சில உள்நாட்டு வங்கி அலுவலகங்கள், அந்நிய நாணய பரிமாற்று நிறுவனங்கள், நிறுவன பதிவு அலுவலகங்கள் ஆகியவற்றை , MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திடீர் சோதனையை மேற்கொண்டது.
மோசடி கும்பலுக்கு இடைத் தரப்பாகவும், உடந்தையாகவும் இருந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த நிறுவனங்கள், அனைத்துலக மோசடி கும்பல் மலேசியாவில் நிறுவனங்களைத் திறக்கவும், வங்கி கணக்குகளைத் திறக்கவும் வசதிகளை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வசதிகளினால், அந்த கும்பல், மோசடி குற்றச் செயல்களை செய்வதற்கு மலேசியாவைத் தேர்ந்தெடுத்திருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய துணைத் தலைவர் Datuk Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்.