
ஈப்போ, ஜன 6 – துரித உணவுக்கான தயாரிப்பு பொருட்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரி ஒன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து அந்த லோரியின் 90 விழுக்காடு அழிந்தது. எனினும் இந்த தீ விபத்தில் எவரும் காயம் அடையவில்லை. வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு லோரி தீப்பிடித்து எரிவதாக இன்று காலை மணி 6.30 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தாப்பா மற்றும் தங்சோங் மாலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினருக்கு உதவியாக பிளஸ் நிறுவனத்தின் பராமரிப்பு ஊழியர்களும் செயல்பட்டதால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.