துபாய், பிப் 21 – அன்பின் வெளிப்பாடாக விளங்கும் சிவப்பு நிற இதயம் வடிவிலான ‘எமோஜியை’ ( Emoji ) வட்சாப்பில் அனுப்பினால், ஒருவரை சிறையில் தள்ளமுடியும்.
என்ன ஆச்சரியமாக உள்ளதா ? ஆமாம், சவூதி அரேபியாவில் தான் அத்தகைய தண்டனை வழங்கப்படுகிறது.
காரணம், வட்சாப் போன்ற இணைய உரையாடலின் போது, ஒருவர் அனுப்பும் இதயம் வடிவிலான எமோஜி , பெறுநருக்கு பிடிக்காமல் புகார் கொடுத்தால் அது பாலியல் தொல்லையாக கருதப்படும்.
பாலியல் தொல்லை குற்றத்தின் கீழ், ஒருவரது செயல் உறுதிப்படுத்தப்பட்டால் அந்நபருக்கு இரண்டிலிருந்து 5 ஆண்டுகள் சிறை அல்லது ஒரு லட்சம் ரியால் அபராதம் விதிக்க முடியுமென அந்நாட்டு இணைய குற்ற நிபுணர் எச்சரித்துள்ளார்.