
குவந்தான், ஜன 30 – வட்சாப்பில் வந்த வேலை வாய்ப்பை நம்பி, ஆசிரியர் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 21, 694 ரிங்கிட் பணத்தை பறிகொடுத்து ஏமாந்திருக்கிறார்.
இணையம் வாயிலாக பொருட்களை வாங்கி விற்கும் பகுதி நேர வேலையை நம்பி , 21 வயதான அந்த பெண் , 10 முறை இரு வேறு வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்தததாக பகாங் போலீஸ் தலைவர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார்.
அந்த பணத்தை பரிமாற்றம் செய்தப் பின்னர் , உறுதியளித்தது போல் பொருட்கள் வந்து சேராததை அடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்ததாக அவர் கூறினார்.
இவ்வேளையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்குமெனக் கூறி, சமூக வலைத்தளங்களில் மூலம் வழங்கப்படும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாமென Ramli Mohamed கேட்டுக் கொண்டார்.
மேலும், பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு முன், அந்த வங்கி கணக்கின் விபரத்தை semakmule அகப்பக்கத்தின் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தினார்.