Latestஉலகம்

வட்டார அமைதி நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவீர் ஆசியான் – சீனாவுக்கு அன்வார் கோரிகை

நானிங் , செப் 17 – வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையில் ஆசியானும் , சீனாவும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டிருக்கிறார். நிலைத்தன்மை மற்றும் வளப்பத்தில் கவனம் செலுத்தி, இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தக உறவுகளை வளர்ப்பதில் ஆசியான் மற்றும் சீனா கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். இது கோவிட் தொற்றுக்கு பிந்திய சவால்கள், உலகாளவிய அரசியல் பதட்டங்கள் எதிர்கொள்ளும் நிலையில், 20வது சீனா-ஆசியான் எக்ஸ்போ (CAEXPO) மற்றும் சீனா-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சநிலை மாநாடு (CABIS) ஆகியவற்றில் அன்வார் தொடக்க உரையை ஆற்றியபோது இதனை தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் ஆசியான் மிக வேகமாக வளர்ந்து வரும் வட்டாரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும்,ஆசியானுடன் சீனாவும் தங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு உத்திகளை பன்முகப்படுத்துவது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்தார். “உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், ஆசியான் அனைத்துலக முதலீட்டிற்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார். தனது உரையை வழங்குவதற்கு முன் மாண்டரின் மொழியில் விருந்தினர்களை வாழ்த்திய அன்வார், இலக்கயியல் யுகத்தில் வளர்ச்சியடைய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு இலக்கியியல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துமாறு ஆசியான் மற்றும் சீனாவை கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!