
புதுடில்லி, மே 29 – வட இந்திய மாநிலமான மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக மூண்ட கலவத்தில் 40 பேர் மாண்டனர். இம்மாத தொடக்கத்திலிருந்து மணிப்பூரிலில் நிகழ்ந்துவரும் கலவரத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த இரு நாட்களில் சந்தேகத்திற்குரிய 40 தீவிரவாதிகளும் இரண்டு போலீஸ்காரர்களும் மாண்டதாக மணிப்பூர் முதலமைச்சர் Biren Singh தெரிவித்தார். பொதுமக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் M16 மற்றும் ஏ.கே 47 துப்பாக்கிகளை பயன்படுத்தினர். அதோடு அவர்கள் கிராமங்களில் புகுந்து மக்களின் வீடுகளுக்கும் தீவை வைத்ததனர். இதனால் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக Biren Singh கூறினார்.