
கோலாலம்பூர், மே 16 – இன்று வணக்கம் மலேசியாவின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா. இந்த இனிய நாளில் கடந்த காலங்களில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி வந்த ஆறரை லட்சத்துதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், வாசகர்கள் உட்பட பணியாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வணக்கம் மலேசியா நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ் இலக்கவியல் செய்தியை கடந்த 2003 -வது ஆண்டு மலேசியாவில் தொடங்கிய முதல் ஊடகம் வணக்கம் மலேசியா என்பதோடு தற்போது மாதத்திற்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று நாட்டில் முதன்மை செய்தி ஊடகமாக வளர்ந்திருப்பதில் பெருமை கொள்கிறது.
வணக்கம் மலேசியா தொடர்ந்து சமூக கடப்பாட்டில் தனது பங்கை உணர்ந்து கடந்த காலங்களைப் போலவே இனி வரும் காலங்களிலும் மேலும் முனைப்பாக தகவல் வழங்குவதிலும் மக்களிடம் சேர்ப்பதிலும் சேவையாற்றும் என வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி தெரிவித்துக் கொண்டார்.