
கோலாலம்பூர், பிப் 2 – பத்துமலை தைப்பூச திருவிழாவின் பக்தி பரவசத்தினை, நேரலையாக உங்களுக்காக கொண்டு வருகிறது வணக்கம் மலேசியா.
நாளை தொடங்கி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு அந்த நேரலை ஒளிபரப்பினை, வணக்கம் மலேசியாவின் ( Vanakkam Malaysia) முகநூல், டிக் டாக் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கண்டு களிக்கலாம்.
நாளை இரவு மணி ஒன்பதளவில் கோலாலம்பூர், ஶ்ரீமகா மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி ரத ஊர்வலத்தோடு, வணக்கம் மலேசியாவின் நேரலை ஒளிபரப்பு தொடங்கும் .
மறுநாள் சனிக்கிழமை, மதியம் மணி 3-க்கு பத்துமலை முருகன் திருத்தலைத்தை வெள்ளி ரத்தம் வந்தடைந்து, சேவல் கொடி ஏற்றப்பட்டு, தைப்பூசம் அதிகாரப்பூவமாக தொடங்கும் நிகழ்வினையும் வணக்கம் மலேசியாவின் நேரலையில் மக்கள் பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை பத்துமலை தைப்பூச உற்சவத்தின் நேரலை காலை மணி 6-க்கே தொடங்கும் வேளை, நதிக்கரை திருத்தோற்சவத்தில் இருந்து மேல் குகையில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் முருகனின் தரிசனம் வரையில் , அனைத்து முக்கிய நிகழ்வுகளை உங்களுக்காக நேரலையாகக் கொண்டு வருகிறோம்.