கூச்சிங், ஆகஸ்ட் -18 – சுக்மா எனப்படும் 2024 மலேசிய விளையாட்டுப் போட்டி சரவாக் தலைநகர் கூச்சிங்கில் நேற்றிரவு கோலாகலமாகத் தொடங்கியது.
சுமார் 40,000 பேர் கூடியிருந்த சரவாக் விளையாட்டரங்கில், மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாஃபார் (Tun Dr Wan Junaidi Tuanku Jaafar) சுக்மாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
ட்ரோன் (dron) சாகசங்கள், வண்ணமய லேசர் (laser) ஜாலங்கள், வாணவேடிக்கைகள் என தொடக்கவிழா களைக்கட்டியது.
ஜேக்கலின் விக்டர் (Jacklyn Victor) உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் இசைப்படைப்புகளும் இரசிகர்களை மகிழ்வித்தன.
ஆகஸ்ட் 24 வரை நடைபெறும் இந்த சுக்மா போட்டியில் 37 வகையான விளையாட்டுகளில் 488 தங்கப்பதங்கள் போட்டியிடப்படவிருக்கின்றன.
கூட்டரசு பிரதேசம், சிறப்பு அழைப்பின் பேரில் புருணை உட்பட மொத்தம் 15 அணிகள் சுக்மாவில் பங்கேற்கின்றன.