Latestஉலகம்

வதந்தியை பரப்பாதீர்; அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு, ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் ஒருபோதும் விநியோகித்தது இல்லை என வட கொரியா கூறியது.  அவ்வாறு செய்யும் எந்த திட்டமும் இல்லை எனவும் அது தெரிவித்தது. அதனால், வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வதந்திகளை பரப்பாமல், “வாயை மூடிக் கொண்டு” வேலையை பார்க்குமாறு அமெரிக்காவுக்கு அது எச்சரிக்கை விடுத்தது.

ஆயுத கொள்முதல் தொடர்பான தீர்மானத்தை வட கொரியா மீறி விட்டதாக, அண்மையில் அமெரிக்காவும், வட கொரியாவுடன் பகைமை பாராட்டும் மேலும் சில நாடுகளும் இணைந்து வதந்தியை கிளப்பின. எனினும், தாங்கள் ஒருபோதும் ரஷ்யாவிற்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் இறக்குமதி செய்தது இல்லை என Pyongyang திட்டவட்டமாக கூறியது. அதுபோல, இனி ஏற்றுமதி செய்யும் திட்டமும் தங்களுக்கு இல்லை என்றது அது.

வட கொரியாவிடமிருந்து, லட்சக்கணக்கான ராக்கெட்டுகளையும், பீரங்கிகளையும் கொள்முதல் செய்யும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக, இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு துணை பேச்சாளர் வேதாந்த் படேல் (Vedanta Patel) கூறியிருந்தார். உக்ரைனில் பயன்படுத்த அந்த ராக்கெட்டுகளும், பீரங்கிகளும் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், பின்னர் அந்த கொள்முதல் முழுமை பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட ஆயுதங்கள் உக்ரைனில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை எனவும், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். அதே போல, டிரோன் (Drone) ஆளில்லா விமானங்களை ஈரான், ரஷ்யாவுக்கு விநியோகிப்பதாக அமெரிக்கா முன் வைத்த குற்றச்சாட்டை தெஹ்ரான் (Tehran) மறுத்திருந்தது.

ரஷ்யாவும், வட கொரியாவும், தங்கள் உறவு குறித்து அண்மையில் பேசியுள்ளன. பொதுவான முயற்சிகள் அடிப்படையில் இரு நாடுகளின் இருவழி உறவும் மேம்படுத்தப்படுமென, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறியிருந்த வேளை, இரு நாடுகளுக்கு இடையிலான வியூக, திட்டமிடல் ஒத்துழைப்பு, ஆதரவு, ஒத்துழைப்பு ஆகியவை ஒரு புதிய நிலையை அடைந்திருப்பதாக குறிப்பிட்டு, வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், புடினுக்கு கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!