
கோலாலம்பூர், பிப் 1 இன்று முதல் வனவிலங்குகளை கடத்தும் குற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனையை எதிர்நோக்குவார்கள் என தேசிய வனவிலங்கு பூங்காத்துறை தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் திருத்தங்களுக்கு ஏற்ப வனவிலங்குகளை கடத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 10 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டை ஆகியவை விதிக்கப்படும் என வனவிலங்கு பூங்காத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துவரும் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு கடுமையான சட்டம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை பெர்மிட் அனுமதியின்றி இறக்குமதி அல்லது ஏற்றுமதி நடடிக்கையை மேற்கொண்டால் 10 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படும்.