ஜோகூர் பாரு, ஏப் 8- வன்செயல்களில் ஈடுபட்டு வந்த வட்டி முதலைகள் கும்பலைச் சேர்ந்த 7 சந்தேகப் பேர்வழிகளை கைது செய்யும் முயற்சியில் ஜோகூர் போலீசார் வெற்றிபெற்றிருப்பதாக அந்மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. Kumar தெரிவித்தார். மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். உள்ளூர் பெண் ஒருவர் உட்பட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். 29 மற்றும் 46 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது சொத்துக்களுக்கு தீ வைப்பதுடன், அவர்களை மிரட்டியும் வந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Kumar கூறினார்.
ஜோகூர்பாரு தென் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ஏழு கை தொலைபேசிகள், 2,300 ரிங்கிட் ரொக்கம், ஒரு மடிக்கணினி, சிவப்பு வண்ணப்பூச்சு , புரோடுவா மைவி கார் , புரோட்டான் சாகா கார் ஆகியவையும் அந்த கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக குமார் தெரிவித்தார். கடனை திரும்ப செலுத்தாதவர்களின் வீட்டில் வண்ணப்பூச்சுகளை ஊற்றி சேதப்படுத்தும் ம் ஒவ்வொருவருக்கும் தலா 600 ரிங்கிட்டும், சொத்துக்களுக்கு தீவைத்தால் ஆயிரம் ரிங்கிட்டையும் அவர்களுக்கு வட்டி முதலைக் கும்பல் வழங்கி வந்த தகவலையும் அவர் தெரிவித்தார்.